Wednesday, February 11, 2015

பொதுத்தமிழ்


   1)   வெற்றி தரும் இறைவியின் அருளுடைமையைப் பாராட்டுதல் என்பது - கொள்ளவை நிலை
2)   கூறு என்பதன் தொழிற்பெயர் வடிவம் - கூறல் 
3)   “சுலோசனா சதி” என்னும் நாடகத்தை இயற்றியவர் யார் - சங்கரதாஸ் சுவாமிகள்
4)   இடைச்சங்கம் நிறுவப்பட்ட இடம் எது - கபாடபுரம்
5)   தொகுத்தோன் தொகுப்பித்தோன் பற்றிய வரலாறு முழுமையாக அமையப்பெற்ற நூல்கள் - அகநானூறு, ஐங்குறுநூறு
6)   பாலைத் திணைக்குரிய உரிப்பொருள் - பிரிதல்
7)   தலைவியின் நல்லியல்பைத் தலைவனிடம் பாங்கன் கூறுவதை தொல்காப்பியர் எவ்வாறு கூறுகிறார் - செவ்வி சப்பல்
8)   செய்யுளில் சொற்கள் முறைபிறழாமல் வரிசையாக அமைந்து வருவது - நிரல் நிறைப் பொருள்கோள் 
9)   செய்யுளில் இயல்பான ஒன்றை மிகைப்படுத்திக் கூறுவது - உயர்வு நவிற்சி அணி
10) குறுந்தொகையைத் தொகுத்தவர் யார் -  பூரிக்கோ
11) பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்து எந்த மன்னனைப் பாடுகிறது - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
12) மணிமேகலை எந்தச் சமயக் காப்பியம் - புத்த சமயம்
13) உத்தரபுராணத்தின் வழிவந்த நூல் எது - யசோதர காப்பியம்
14) 'காந்தள் மலர்' எத்திணைக்குரியது -  குறிஞ்சி
15) 'காண்' எனும் வேர்ச்சொல்லின் பெயரெச்ச வடிவம் என்ன - கண்ட
16) தொல்காப்பியச் சொல்லதிகாரம் எத்தனை இயல்களைக் கொண்டது - ஒன்பது
17) 'மான்மியம்' என்பதன் பொருள் என்ன - தலபுராணம்
18) 'நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்' என்று பாடியவர் யார் – அப்பர்
19) அகநானூற்றுப் பாக்களின் அடி வரையறை யாது - 13 அடி முதல் 31 அடி வரை
20) 'ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு நாய கன்போர்க் குகன் எனும் நாமத்தான்' என்ற கம்பராமாயணப் பாடலில் வரும் அம்பி என்ற சொல்லின் பொருள் என்ன - படகு

No comments:

Post a Comment