Friday, January 30, 2015

பொதுத்தமிழ் - அரசர்களின் சிறப்பு பெயர்கள்



சேர வம்சம் 
01. சேரன் செங்குட்டுவன் - கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்
02. உதியஞ்சேரல் - பெருஞ்சோற்றுதியன் (பாரதப்போரில் உணவு அளித்தல்)
03. நெடுஞ்சேரலாதன் - இமயவரம்பன், ஆதிராஜன்
சோழ வம்சம்
04. முதலாம் பராந்தகன் - மதுரை கொண்டான், மதுரையும் ஈழமும் கொண்டான், பொன் வேய்ந்த பராந்தகன்
05. இராஜாதித்தியன் (பட்டத்து இளவரசன்) - யானை மேல் துஞ்சிய சோழன்
06. இரண்டாம் பராந்தகன் - சுந்தரச் சோழன்
07. முதலாம் இராஜராஜன் - மும்முடிச்சோழன், சிவபாத சேகரன், அருண்மொழி,இராஜகேசரி
08. முதலாம் இராஜேந்திரன் - கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்டான், பண்டிதசோழன், உத்தமசோழன்.
09. முதலாம் குலோத்துங்கன் - சுங்கம் தவிர்த்த சோழன், நிலமளந்த பெருமாள், திருநீற்றுச் சோழன்
10. இரண்டாம் குலோத்துங்கன் - கிருமிகந்த சோழன்
11. மூன்றாம் குலோத்துங்கன் - சோழ பாண்டியன்
பாண்டிய வம்சம்
12. மாறவர்மன் அவனிசூளாமணி - மறாவர்மன், சடயவர்மன்
13. செழியன் சேந்தன் - வானவன்
14. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் - சோழநாடு கொண்டருளியவன்
15. முதலாம் சடயவர்மன் சுந்தர பாண்டியன் - கோயில் பொன்வேய்ந்த பெருமான்
16. முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் - கொல்லம் கொண்டான்
17. நெடுஞ்செழியன் - ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்,தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன்

3 comments:

  1. ssir thanks your service. But how to download it pl help us

    ReplyDelete
  2. இப்பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாகவும்,அனைவரும் புரிந்துகொள்ள எளிமையாகவும்,உள்ளது மிக்க நன்றி

    ReplyDelete
  3. first copy file next save in PDF file

    ReplyDelete