Thursday, January 29, 2015

பொதுத்தமிழ் - சங்க இலக்கியத் திணைகள்



01. தமிழில் திணை என்னும் சொல் எந்த பொருளைத் தரும் - பிரிவு
02. திணிவைப் பிரித்துக் காட்டுவது எது - திணை
03. மலையும் மலை சார்ந்த நிலமும் எது - குறிஞ்சி
04. காடும் காடு சார்ந்த நிலமும் - முல்லை
05. வயலும் வயல் சார்ந்த நிலமும் - மருதம்
06. கடலும் கடல் சார்ந்த நிலமும் - நெய்தல்
07. முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து வெம்மையுற்ற நிலம் - பாலை
08. புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (கூடல்) - குறிஞ்சி
09. இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்து இருத்தல்) - முல்லை
10. ஊடலும் ஊடல் நிமித்தமும் - மருதம்
11. இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ( வருந்துதல்) - நெய்தல்
12. பிரிதலும் பிரிதல் நிமித்தமும் - பாலை
13. பாடல் தலைவனின் நல்லியல்புகள் பற்றிக் கூறுவது - பாடாண் திணை
14. உலகத்தின் நிலையாமை தொடர்பான கருப்பொருள் கொண்டவை - காஞ்சித் திணை
15. மன்னனுடைய வெற்றி பற்றிய செய்திகளைக் கூறுவது - வாகைத் திணை
16. படையெடுத்து வந்த வேற்று நாட்டு அரசனுடன் போர் செய்து அவனை வெல்வது பற்றிக் கூறுவது- தும்பைத் திணை
17. ஒரு அரசன் வேற்று நாட்டுக் கோட்டையை முற்றுகை இடுவதையும், பகை அரசன் நடவடிக்கைகளையும் பற்றிக் கூறுவது - உழிஞைத் திணை
18. மன்னனொருவன் வேற்று நாட்டின் மீது படை நடத்திச் செல்வது, அதனைப் பகை அரசன் எதிர்ப்பது ஆகிய செய்திகளைக் கூறுவது - வஞ்சித் திணை
19. ஒரு மன்னன் எதிரி நாட்டு எல்லையூடு புகுந்து ஆநிரைகளைக் கவர்ந்து செல்வதையும். அந்த ஆநிரைகளை மீட்டு வருவதையும் கருப்பொருளாகக் கொண்டவை - வெட்சித் திணை
20. புறத்திணைப் பிரிவுகள் எத்தனை வகைப்படும்- 7

No comments:

Post a Comment